Shocking but true: மகாத்மா காந்திக்கு "தேசத்தந்தை" பட்டத்தை வழங்க முடியாது : மத்திய அரசு

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஆறாம் வகுப்பு மனைவி ஐஷ்வர்யா, காந்தியை ஏன் "தேசத்தந்தை" என அழைக்க வேண்டும் என கேள்வி கேட்டு பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் உள்ளிட்டோருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, காந்திக்கு அப்படி ஒரு பட்டத்தை மத்திய அரசு வழங்கவில்லை என கூறியது. இப்பதிலால் ஆச்சரியமடைந்த ஐஷ்வர்யா, காந்திக்கு தேசத்தந்தை எனும் பட்டத்தை உத்தியோகபூர்வமாக மத்திய அரசு வழங்கி உத்தரவிடவேண்டும் என மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு தற்போது பதில் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 உள்பிரிவு 1 சட்டத்தின் கீழ், கல்வி மற்றும் இராணுவ பட்டத்தை தவிர வேறு பட்டங்களை வழங்க அனுமதி மறுப்பதால், காந்திக்கு தேசத்தந்தை எனும் பட்டத்தை வழங்க குடியரசு தலைவருக்கு அனுமதி இல்லை எனக் கூறியுள்ளது.
This again showed that we are following something madly which was said to us by senior citizens without knowing whether it's true or not.
NOTE: This same message stating that Gandhi is not our father of nation was a;ready mentioned in a post in this blog before 2 months.