Saturday, April 13, 2013

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி இப்போது பானி பூரி விற்கிறார்

2011 எதென்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு வெண்கலப்பதங்களை
கைப்பற்றிய இந்தியாவின் சீதா சஹூ, இப்போது பானி பூரி விற்றுக்கொண்டிருக்கிறார் எனும் தகவல் ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவை சேர்ந்த சீதா, கடந்த 2011 மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 200 மற்றும் 1,600 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கங்கள் வென்றவர். அப்போது அவருக்கு வயது 15.

அவருக்கு, ஒவ்வொரு பதக்கத்திற்கும் தலா 50,000 ரூ வழங்கப்படும் என மத்திய பிரதேச சமூக நீதி அமைச்சர் கோபால் பார்கவா அறிவித்திருந்தார். அதன் படி ரூ. 1 இலட்சம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அவருக்கு அத்தொகை கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து குடும்ப வறுமையினால் அவர் சாலையோரம் பானி பூரி விற்பதாக அவரது தாயார் கிரண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சீதா எதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படும் முன்பு மத்திய பிரதேச முதல்வர் சிவ் ராஜ் சிங் சௌஹான் அவரை சந்தித்து போதுமான உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

எனினும் எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உற்சாகத்தில் விளையாட்டுத்துறையில் தொடர்ந்து ஈடுபட ஆர்வம் கொண் டிருந்தார் சீதா. ஆனால் அவருக்கு அறிவிக்கப்பட்ட எந்த உதவித்தொகையும் கிடைக்காததால் இந்த நிலைமைக்கு சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

It'll be really help full if you give us some feedback